ராம்சரணின் ஆர்சி17 படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமான சாத்விகா வீரவல்லி: அதிகாரப்பூர்வ தகவல்

ராம்சரணின் ஆர்சி17 படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமான சாத்விகா வீரவல்லி: அதிகாரப்பூர்வ தகவல்

மெகா பவர் ஸ்டார் ராம்சரண் நடிக்கும் 17வது படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு பல முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகை சாத்விகா வீரவல்லி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. சாத்விகா வீரவல்லி நடிப்பில் உருவாகியுள்ள 'ஆகாசமிலோ ஒக தாரா' திரைப்படம் வரும் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ராம்சரணின் பிரம்மாண்ட திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக தேர்வாகியிருப்பது அவரது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான வாய்ப்பாக கருதப்படுகிறது. இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

· @_movietamil

பழைய செய்திகள்