ராம் சரண், சுகுமார் இணையும் RC17: சாரா அர்ஜுன் உடன் லுக் டெஸ்ட் நிறைவு, படப்பிடிப்பு விரைவில்!

ராம் சரண், சுகுமார் இணையும் RC17: சாரா அர்ஜுன் உடன் லுக் டெஸ்ட் நிறைவு, படப்பிடிப்பு விரைவில்!

கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'RC17'. 'ரங்கஸ்தலம்' போன்ற பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுகுமார் மற்றும் ராம் சரண் மீண்டும் இணையும் கூட்டணிக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் போட்டோஷூட் பணிகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளன. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இளம் நடிகை சாரா அர்ஜுனுக்கான லுக் டெஸ்ட் போட்டோஷூட் நேற்று வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று நாயகன் ராம் சரணுக்கான பிரத்யேக லுக் டெஸ்ட் மற்றும் போட்டோஷூட் ஹைதராபாத் ஸ்டுடியோவில் நடைபெறுவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிராமத்துப் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட களத்தில் உருவாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் சாரா அர்ஜுன் இணையும் புதிய காம்போவை திரையில் காண சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· @_movietamil

பழைய செய்திகள்