ராம் சரண் - சுகுமார் இணையும் 'RC17': பூஜை விழாவுடன் தொடங்கும் பிரம்மாண்ட படம்!

ராம் சரண் - சுகுமார் இணையும் 'RC17': பூஜை விழாவுடன் தொடங்கும் பிரம்மாண்ட படம்!

'ரங்கஸ்தலம்' போன்ற எவர்கிரீன் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் படைப்பாற்றல் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணையும் 'RC17' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா நவம்பர் 1 அன்று காலை 10.50 மணிக்கு விமரிசையான பூஜையுடன் நடைபெறுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி சீரிஸ் ஆகிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த மெகா பட்ஜெட் பிரம்மாண்ட திரைப்படத்தைத் தயாரிக்கின்றன. ராம் சரணின் அபாரமான ஆக்ஷன் நடிப்பும், சுகுமாரின் சமரசமற்ற திரைக்கதை நுணுக்கங்களும் மீண்டும் இணைய இருப்பது ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இக்கூட்டணி மீண்டும் ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்யும் என்று வர்த்தக வட்டாரங்கள் கணிக்கின்றன. பூஜை நிகழ்வைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு அட்டவணை, கதாநாயகி மற்றும் பிற முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விரிவான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்