ராம்சரண் சுகுமார் இணையும் 'RC17': விரைவில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு!

ராம்சரண் சுகுமார் இணையும் 'RC17': விரைவில் பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு!

மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவான 'ரங்கஸ்தலம்' திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் 'RC17' படம் குறித்த உற்சாகமான அப்டேட்டை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இயக்குநர் சுகுமாரின் அலுவலக அரங்கம் மற்றும் கதை விவாதக் கூடம் முழுமையாகத் தயாராகிவிட்டதாகவும், விரைவில் முறைப்படி பூஜை விழாவுடன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றன. 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு சுகுமார் இயக்கும் அடுத்த பிரம்மாண்ட படம் இது என்பதால், பான்-இந்தியா ரசிகர்களிடையே இக்கூட்டணி மீதான ஆர்வம் இப்போதே எகிறத் தொடங்கியுள்ளது. படத்தின் கதாநாயகி, இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்