மீண்டும் இணையும் ராம் சரண் சுகுமார் கூட்டணி: ஆர்சி 17 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!
ரங்கஸ்தலம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணையும் புதிய படமான ஆர்சி 17 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய திரை அனுபவத்தை இக்கூட்டணி மீண்டும் தரும் என்று படக்குழுவினர் தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ரங்கஸ்தலம் படத்தில் செவித்திறன் குறைபாடுள்ள கிராமத்து இளைஞனாக ராம் சரண் நடித்த சிட்டிபாபு கதாபாத்திரம் இந்திய அளவில் ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது ராம் சரண் தனது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு நேரடியாக இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளதால், தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் இந்திய அளவிலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
· Actor Kayal Devaraj