டோன்ட் ஸ்லீப் டீசருக்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா பாராட்டு: படக்குழு நெகிழ்ச்சி!
மர்மமும் விறுவிறுப்பும் நிறைந்த சைக்கலாஜிக்கல் திரில்லராக உருவாகி வரும் 'டோன்ட் ஸ்லீப்' திரைப்படத்தின் டீசருக்கு முன்னணி இந்திய திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவின் தனித்துவ இயக்குனரான ராம்கோபால் வர்மாவின் இந்த உற்சாகமூட்டும் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து படக்குழு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. டீசரில் இடம்பெற்ற இருண்ட காட்சியமைப்புகளும் வித்யாசமான திகில் பின்னணி இசையும் பலரையும் ஈர்த்துள்ளது. எப்போதும் புதுமையான திரில்லர் படங்களை மனதாரப் பாராட்டும் ராம்கோபால் வர்மாவின் இந்த பாராட்டு, படத்தின் மீதான கவனத்தை உடனடியாக பல மடங்கு அதிகரித்துள்ளது. இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் இந்த டீசர் யூடியூப்பில் தொடர்ந்து பல லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் விறுவிறுப்பான முழு டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீட்டு விபரங்கள் தயாரிப்பு தரப்பால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
· Ursvamsishekar