இயக்குநராக அவதாரம் எடுக்கும் ராம் பொதினேனி: 'ராபோ 23' லோன் உல்ஃப் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெலுங்கு திரையுலகின் எனர்ஜியான கதாநாயகனான ராம் பொதினேனி, தனது திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய ஆச்சரியமான முடிவை எடுத்துள்ளார். அவரது 23வது திரைப்படமான 'ராபோ 23' (RAPO23) படத்தின் மூலம் அவர் இயக்குநராகவும் கதாசிரியராகவும் புதிய அவதாரம் எடுக்கவுள்ளார் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'தி ஸ்டோரி ஆஃப் எ லோன் உல்ஃப்' (The Story of a Lone Wolf) என்ற அழுத்தமான வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த போஸ்டர் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. யாரையும் சாராமல் தனக்கான பாதையை சுயமாகத் தேர்ந்தெடுத்து உலகை எதிர்கொள்ளும் ஒரு துணிச்சலான மனிதனின் கதையாக இது உருவாக உள்ளது என்பதை படக்குழு வெளியிட்டுள்ள விளக்கம் சுட்டிக்காட்டுகிறது. இப்படத்தை கிருஷ்ணா பொதினேனி மற்றும் ராபோ சினிமாடிக்ஸ் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் மிரட்டலான டீசர் மிக விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், நடிகர் ராம் பொதினேனியின் இந்த புதிய முயற்சி கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
· Ursvamsishekar