8 நாட்களில் 1060 கோடி ரூபாய் வசூல்: உலக பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தும் 'ராமாயணா'!

8 நாட்களில் 1060 கோடி ரூபாய் வசூல்: உலக பாக்ஸ் ஆபிசில் வசூல் வேட்டை நடத்தும் 'ராமாயணா'!

பாக்ஸ் ஆபிசில் தொடர்ந்து இமாலய வசூல் வேட்டை நடத்தி வரும் பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படமான 'ராமாயணா', முதல் 8 நாட்களில் உலகளவில் 1,060 கோடி ரூபாய் மொத்த வசூலை எட்டியுள்ளதாக மூவி தமிழ் எக்ஸ் தளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியானது முதல் நாளுக்கு நாள் ரசிகர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதுகிறது. இந்திய அளவில் மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. இதிகாச கதையை தற்கால தொழில்நுட்ப நேர்த்தியோடு காட்சிப்படுத்தியுள்ள விதம் அனைத்து தலைமுறை ரசிகர்களையும் தியேட்டர்களுக்கு குடும்பம் குடும்பமாக வரவழைக்கிறது. வெறும் 8 நாட்களிலேயே 1,060 கோடி ரூபாயை அள்ளிக்குவித்து வசூல் வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் 'ராமாயணா', இரண்டாவது வார இறுதியிலும் பல புதிய வசூல் சாதனைகளைப் படைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

· @_movietamil

பழைய செய்திகள்