பிரம்மாண்ட ராமாயணா: பிரீமியம் திரையரங்குகளில் முன்கூட்டிய முன்பதிவு தொடங்கியது!
இந்திய திரையுலகமே பேராவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இதிகாச திரைப்படமான 'ராமாயணா' படத்தின் முன்கூட்டிய முன்பதிவு பிரீமியம் பார்மட்களில் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC Release) நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. ஐமேக்ஸ் மற்றும் முப்பரிமாண (3D) திரையரங்குகளில் ராமாயண காவியத்தை பிரம்மாண்டமாகக் காண ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருந்த நிலையில், தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பிரீமியம் திரையரங்குகளில் டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருகின்றன. இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்த பிரம்மாண்ட ராமாயண திரைப்படம் புதிய வரலாற்றுச் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· Ursvamsishekar