ராமாயணா படத்தில் 'ஜடாயு'வாக அனுபம் கெர்: தர்மத்தின் சிறகுகள் போஸ்டர் வெளியீடு!

ராமாயணா படத்தில் 'ஜடாயு'வாக அனுபம் கெர்: தர்மத்தின் சிறகுகள் போஸ்டர் வெளியீடு!

இந்திய திரையுலகின் மிகப்பெரிய வரலாற்று காவிய படைப்பாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தில் ஜடாயு கதாபாத்திரத்தில் நடிக்கும் மூத்த நடிகர் அனுபம் கெர்ரின் கம்பீரமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 'தர்மத்தின் சிறகுகள்' என்ற அடைமொழியுடன் வெளியான இந்த போஸ்டர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்தின் பிரம்மாண்ட காட்சிகள் அதிநவீன கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் செதுக்கப்பட்டு வருகின்றன. வரும் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் ஐமேக்ஸ் உள்ளிட்ட அனைத்து பிரீமியம் திரைகளிலும் இப்படம் மிக பிரம்மாண்டமாக வெளியாகிறது. மேலும் இன்னும் எட்டு நாட்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் சினிமா ஆர்வலர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்