புக்மைஷோவில் 'ராமாயணா' சாதனை: 14 நாட்களில் 5.23 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!

புக்மைஷோவில் 'ராமாயணா' சாதனை: 14 நாட்களில் 5.23 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!

சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'ராமாயணா' திரைப்படம், புக்மைஷோ தளத்தில் மின்னல் வேகத்தில் டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்து வருவதாக பிரபல சினிமா செய்தி தொடர்பாளர் வம்சி சேகர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 14 நாட்களில் மட்டும் 5.23 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து சினிமா உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அக்டோபர் 20 அன்று தொடங்கிய முன்பதிவு, ஒவ்வொரு நாளும் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. அக்டோபர் மாத இறுதியில் நாளுக்கு நாள் வேகம் எடுத்த விற்பனை, நவம்பர் 1 அன்று 86,000 டிக்கெட்டுகளாகவும், நவம்பர் 2 அன்று ஒரே நாளில் சுமார் 1.10 லட்சம் டிக்கெட்டுகளாகவும் எகிறி புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சாய் பல்லவி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் யாஷ் என இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிப்பதால் இந்த பிரம்மாண்ட படைப்பிற்கு அனைத்து மொழி ரசிகர்களிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நமித் மல்ஹோத்ராவின் தயாரிப்பில் இயக்குனர் நிதேஷ் திவாரி மிக பிரம்மாண்டமான முறையில் செதுக்கி வரும் இந்த இதிகாச காவியம், பாக்ஸ் ஆபீஸில் பல புதிய வசூல் சாதனைகளை முறியடிக்கும் என வர்த்தக ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர். தொடர்ந்து அதிகரித்து வரும் டிக்கெட் முன்பதிவு வேகம், திரையரங்குகளில் படம் வெளியாகும் போது வரலாறு காணாத தொடக்க வசூலை ஈட்டும் என்பதை உறுதி செய்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்