ஒரே மணி நேரத்தில் 1.40 லட்சம் டிக்கெட்டுகள்: புக்மைஷோவில் வரலாற்று சாதனை படைத்த ராமாயணா!
பிரம்மாண்ட காவியத் திரைப்படமான ராமாயணா ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளமான புக்மைஷோவில் வெறும் ஒரே மணி நேரத்தில் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை விற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாக ஒன்லி கோலிவுட் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் படைக்காத புதிய சாதனையாக இது பதிவாகியுள்ளது. முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே புக்மைஷோ செயலியில் ரசிகர்கள் முண்டியடித்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ததால் இணையதளமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மவுசு காணப்பட்டது. தலைமுறைகளைக் கடந்து கொண்டாடப்படும் ராமாயண காவியத்தின் நவீன வடிவமைப்பு, மிகச் சிறந்த தொழில்நுட்ப மெருகேற்றம் மற்றும் நட்சத்திர நடிகர்களின் நடிப்பு ஆகியவை இத்தகைய அபார டிக்கெட் புக்கிங் சாதனையை சாத்தியமாக்கியுள்ளன. படம் வெளியான ஆரம்ப நாளிலிருந்தே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பல மைல்கற்களைத் தாண்டி வரும் ராமாயணா திரைப்படம், திரையரங்கு வரலாற்றில் மறக்க முடியாத ஒரு பொற்கால வசூல் அலையை உருவாக்கியுள்ளது.
· Only Kollywood