பாக்ஸ் ஆபிசில் வெறும் 6 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்த 'ராமாயணா'!

பாக்ஸ் ஆபிசில் வெறும் 6 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்த 'ராமாயணா'!

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இதிகாச படைப்பான 'ராமாயணா' திரைப்படம் வெளியாகி வெறும் 6 நாட்களில் உலகளாவிய பாக்ஸ் ஆபிசில் 1,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்து மாபெரும் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்த வசூல் சாதனையை சினிமா பிஆர்ஓ வம்சி சேகர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான இந்த பிரம்மாண்ட திரைப்படம், முதல் நாளிலிருந்தே அனைத்து மொழிகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. இந்தியாவின் முன்னணி நகரங்கள் மட்டுமின்றி சர்வதேச பாக்ஸ் ஆபிசிலும் வசூல் மழையை பொழிந்து வருகிறது. வெறும் ஆறே நாட்களில் 1,000 கோடியை எட்டியுள்ள நிலையில், வரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் வேட்டை நீடிக்கும் என்றும், இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கும் என்றும் வர்த்தக ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்