பிரம்மாண்ட 'ராமாயணா': கைகேயியாக லாரா தத்தா, மந்தரையாக ஷீபா சதா! 2026 தீபாவளி ரிலீஸ் அறிவிப்பு!

பிரம்மாண்ட 'ராமாயணா': கைகேயியாக லாரா தத்தா, மந்தரையாக ஷீபா சதா! 2026 தீபாவளி ரிலீஸ் அறிவிப்பு!

இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் நிதேஷ் திவாரியின் 'ராமாயணா' திரைப்படத்தில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்த புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கைகேயி கதாபாத்திரத்தில் பிரபல நடிகை லாரா தத்தாவும், மந்தரையாக திறமை வாய்ந்த நடிகை ஷீபா சதாவும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக 'கேஜிஎஃப்' புகழ் யாஷ் நடிக்கின்றனர். சன்னி தியோல், ரவி துபே உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகர்கள் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைக்கின்றனர் என்பது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது. அயோத்தியின் விதியை மாற்றியமைத்த கைகேயி மற்றும் மந்தரையின் கதாபாத்திர வடிவமைப்பு இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இரண்டு பாகங்களாகத் திட்டமிடப்பட்டுள்ள இந்த இதிகாசப் படைப்பு வரும் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்