புக்மைஷோவில் 60 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: நாடு முழுவதும் புதிய வரலாற்றுச் சாதனை படைத்த 'ராமாயணா'!
இந்தியத் திரையுலகை வியப்பில் ஆழ்த்தியுள்ள 'ராமாயணா' திரைப்படம், புக்மைஷோ தளத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமான (60 லட்சம்+) டிக்கெட்டுகள் விற்பனையாகி இமாலய சாதனை படைத்துள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து ரசிகர்கள் அளித்து வரும் இந்த பிரம்மாண்ட பேராதரவு குறித்த தகவலை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். வெளியான முதல் நாளிலிருந்தே அனைத்து மொழிகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிவரும் இத்திரைப்படம், குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒருசேர திரையரங்குகளுக்கு ஈர்த்து வருகிறது. குறிப்பாக நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போர்க்காட்சிகளும், காவியத்தின் உணர்வுப்பூர்வமான தருணங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ஒரே டிக்கெட் தளத்தில் குறுகிய காலத்திற்குள் 60 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்படுவது இந்திய சினிமா வரலாற்றில் மிகச் சில படங்களுக்கு மட்டுமே சாத்தியமாகியுள்ளது. அந்த சாதனையை எட்டியுள்ள 'ராமாயணா', திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் வேட்டையை நிகழ்த்தி வருகிறது.
· Actor Kayal Devaraj