முதல் நாளிலேயே ரூ.155 கோடி வசூல் சாதனை படைத்த ராமாயணம் திரைப்படம்
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள ராமாயணம் திரைப்படம், முதல் நாளில் மட்டுமே சர்வதேச அளவில் ரூ.155 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மூவி தமிழ் தளம் எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வ வசூல் விவரங்களைப் பகிர்ந்துள்ளது. ரசிகர்களிடையே பல மாதங்களாக நிலவி வந்த உச்சக்கட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படத்தின் விசுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் நட்சத்திரங்களின் நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. வட இந்தியா மட்டுமின்றி தென்னிந்தியாவிலும், வெளிநாட்டுச் சந்தைகளிலும் முன்பதிவு முதலே அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி இந்த மாபெரும் வசூலை திரைப்படம் எட்டியுள்ளது. முதல் நாளே ரூ.155 கோடி வசூலைத் தாண்டியுள்ள நிலையில், வரவிருக்கும் வார இறுதி நாட்களில் வசூல் வேட்டை மேலும் பல புதிய உச்சங்களைத் தொடும் என்று வர்த்தக நிபுணர்கள் உற்சாகத்துடன் கணித்து வருகின்றனர்.
· @_movietamil