திரையரங்குகளில் ராமாயணம்: ரிலீசுக்கு இன்னும் 13 நாட்களே உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
இந்திய சினிமாவின் மாபெரும் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படம் வரும் நவம்பர் 5 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில், ரிலீசுக்கு இன்னும் 13 நாட்களே எஞ்சியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிஆர்ஓ டைமண்ட் பாபு தனது எக்ஸ் தளத்தில் இந்த தகவலைப் பகிர்ந்துள்ளார். நமித் மல்ஹோத்ரா மற்றும் கேஜிஎஃப் புகழ் யஷ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர் என்பது உலக சினிமா ரசிகர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஐமேக்ஸ் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு விரைவில் முழுவீச்சில் தொடங்கவுள்ளது.
· Idiamondbabu