'ராமாயணம்' ரிலீஸுக்கு இன்னும் 7 நாட்களே: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தில் ராஜுவின் எஸ்விசி பிரம்மாண்ட வெளியீடு!

'ராமாயணம்' ரிலீஸுக்கு இன்னும் 7 நாட்களே: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் தில் ராஜுவின் எஸ்விசி பிரம்மாண்ட வெளியீடு!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் நமித் மல்ஹோத்ரா தயாரித்துள்ள பிரம்மாண்ட 'ராமாயணம்' திரைப்படம் திரைக்கு வர இன்னும் சரியாக 7 நாட்களே உள்ள நிலையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் படத்தின் திரையரங்கு உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக செய்தித் தொடர்பாளர் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இறை காவியமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ராகிங் ஸ்டார் யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதிநவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் டிக்கெட் முன்பதிவு முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தெலுங்கு மாநிலங்களில் முன்னணி விநியோகஸ்தரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் திரையரங்குகளை அதிக எண்ணிக்கையில் ஒதுக்கியுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. வரும் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ராமாயணம் திரையரங்குகளில் வெளியாகிறது. திரையரங்குகளில் ராம காவியத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில், இன்னும் ஒரு வாரத்தில் பிரம்மாண்டக் கொண்டாட்டம் வெள்ளித்திரையில் அரங்கேற இருக்கிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்