ஒரே மணி நேரத்தில் 72 ஆயிரம் டிக்கெட்டுகள் புக்கிங்: பாக்ஸ் ஆபிஸில் மிரட்டும் ராமாயணா!
பிரம்மாண்ட புராணக் காவியப் படமான 'ராமாயணா' திரையரங்குகளில் வசூல் வேட்டையைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. சினிமா செய்தித் தொடர்பாளர் வம்சி சேகர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள புக்கிங் நிலவரம் ஒட்டுமொத்த திரையுலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பிரபல டிக்கெட் முன்பதிவு தளமான புக்மைஷோவில், கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் சுமார் 72 ஆயிரத்து 920 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. படம் வெளியான நாள் முதலே திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக அரங்கு நிறைந்த நிலையில், வார இறுதி நாட்களில் டிக்கெட் முன்பதிவு அசுர வேகத்தில் எகிறியுள்ளது. காட்சி அமைப்புகள், பிரம்மாண்டமான மேக்கிங் மற்றும் நட்சத்திரங்களின் கம்பீரமான நடிப்பு ஆகியவை அனைத்து தரப்பு மக்களையும் திரையரங்குகளுக்கு இழுத்து வருகின்றன. இந்த மாபெரும் முன்பதிவு வேகம், ராமாயணா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய வசூல் உச்சத்தைத் தொடும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
· Ursvamsishekar