ஹான்ஸ் ஜிம்மர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரம்மாண்ட 'ராமாயணம்': 2026 தீபாவளி ரிலீஸ் தேதியை உறுதி செய்த படக்குழு!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இந்திய சினிமாவின் கனவுப் படைப்பான 'ராமாயணம்' திரைப்படத்தின் சர்வதேசப் பார்வை மற்றும் வெளியீட்டு விவரங்களை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். தந்தை தசரதரின் வாக்குறுதியும், மகன் ராமரின் கடமை உணர்வும் சந்திக்கும் நெகிழ்ச்சியான தருணத்தை மையப்படுத்தி வெளியாகியுள்ள புதிய போஸ்டர்கள் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. நமித் மல்ஹோத்ராவின் டிஎன்இஜி நிறுவனம் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். குறிப்பாக, ஹாலிவுட் இசை மேதை ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைப்பது இந்தியத் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாகும் இக்காவியத் திரைப்படம் வரும் 2026 தீபாவளி பண்டிகைக்கு உலகமெங்கும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வரவுள்ளது. சன்னி தியோல், ரவி துபே உள்ளிட்ட பல்துறை நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உச்சத்தைத் தொட்டுள்ளது.
· Actor Kayal Devaraj