புக்மைஷோவில் வரலாற்று சாதனை படைத்த ராமாயணா: 24 மணி நேரத்தில் 11 லட்சம் டிக்கெட்டுகள் பதிவு!

புக்மைஷோவில் வரலாற்று சாதனை படைத்த ராமாயணா: 24 மணி நேரத்தில் 11 லட்சம் டிக்கெட்டுகள் பதிவு!

பிரம்மாண்ட புராணத் திரைப்படமான 'ராமாயணா' இந்திய பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் இதுவரை கண்டிராத பிரம்மாண்டமான சாதனையைப் பதிவு செய்துள்ளது. பிரபல சினிமா செய்தியாளர் வம்சி சேகர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, புக்மைஷோ தளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1.16 மில்லியனுக்கும் அதிகமான (11.6 லட்சம்) டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒட்டுமொத்தமாக புக்மைஷோவில் மட்டும் 3.23 மில்லியனுக்கும் அதிகமான (32.3 லட்சம்) டிக்கெட்டுகள் இதுவரை விற்றுத் தீர்ந்துள்ளன. கடந்த ஒரு மணி நேரத்தில் மட்டும் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் பதிவாகியுள்ளன. ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், இந்திய சினிமா வரலாற்றின் மிக பிரம்மாண்டமான வசூல் சாதனையை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. அனைத்து மொழி ரசிகர்களையும் ஒருசேர ஈர்த்துள்ள இப்படத்தின் காட்சிகளுக்கு குடும்பங்கள் கூட்டம் கூட்டமாக வருகை தந்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் முன்பதிவு மேலும் புதிய உச்சங்களைத் தொடும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

· Ursvamsishekar

பழைய செய்திகள்