தமிழகமெங்கும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள்: ராமாயணா திரைப்படத்தின் வசூல் வேட்டை!

தமிழகமெங்கும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகள்: ராமாயணா திரைப்படத்தின் வசூல் வேட்டை!

திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் பிரம்மாண்ட காவியப் படமான ராமாயணா திரைப்படத்திற்கு தமிழகமெங்கும் மாலைக் காட்சிகளில் திரையரங்குகள் நிரம்பி வழிவதாக நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக வெளியீட்டுப் பொறுப்பை ஏற்றுள்ள திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் திரையிடல் ஏற்பாடுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவான காவியக் கதையான ராமாயணம், மிகச் சிறந்த தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடனும் காட்சி பிரம்மாண்டத்துடனும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களும் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து வருவதால் பல முன்னணி திரையரங்குகளில் மாலை மற்றும் இரவுக் காட்சிகள் ஹவுஸ்புல் பலகையுடன் இயங்கி வருகின்றன. ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தளங்களிலும் டிக்கெட்டுகள் மிக வேகமாக விற்றுத் தீர்ந்து வருகின்றன. வார இறுதி நாட்களைக் கடந்து வார நாட்களிலும் தொடர்ந்து வலுவான பார்வையாளர் வருகையைப் பதிவு செய்து வரும் ராமாயணா திரைப்படம், திரையரங்கு உரிமையாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளதுடன் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் தொடர்ந்து நிலைத்து நிற்கிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்