"உணர்வுகளுக்கு எல்லைகள் இல்லை": லாஸ் ஏஞ்சல்ஸ் திரையிடலில் 'ராமாயணம்' இயக்குநர் நிதேஷ் திவாரி நெகிழ்ச்சி!
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 'ராமாயணம்' திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலில் பங்கேற்ற இயக்குநர் நிதேஷ் திவாரி, உணர்வுகளுக்கு எல்லைகள் கிடையாது, அவை உலகம் முழுவதும் எளிதில் சென்றடையும் என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். குடும்ப உறவுகள் மற்றும் வாழ்வியல் விழுமியங்களை ஆழமாகப் பேசும் ஒரு காவியமாக இப்படம் உருவாகியுள்ளது. சர்வதேச அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் உலக சினிமா பிரமுகர்களும் ரசிகர்களும் கலந்துகொண்டு பாராட்டுகளைத் தெரிவித்தனர். நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள 'ராமாயணம்' திரைப்படம், இந்தியத் திரையுலகின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
· Actor Kayal Devaraj