இதிகாச காவியம் 'ராமாயணா': இன்னும் 10 நாட்களில் தொடங்கும் பிரம்மாண்ட அப்டேட் கொண்டாட்டம்!
இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்நோக்கும் நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட இதிகாசப் படமான 'ராமாயணா' திரைப்படத்தின் முக்கிய அறிவிப்புக்கு இன்னும் 10 நாட்களே உள்ளன எனப் படக்குழு புதிய போஸ்டர் மூலம் கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளது. நவம்பர் 5 முதல் இப்படத்தின் பிரம்மாண்ட உலகிற்குள் ரசிகர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோகஸ் டிஎன்இஜி மற்றும் யாஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும் நடிக்கின்றனர். ராவணனாக ராக்கிங் ஸ்டார் யாஷ் மிரட்டலான தோற்றத்தில் நடிக்கிறார். மேலும் சன்னி தியோல் அனுமாராக களமிறங்குகிறார். ஆஸ்கர் நாயகர்களான ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்திற்கு இணைந்து இசையமைப்பது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களுடன் ஐமேக்ஸ் வடிவிலும் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ வீடியோ முன்னோட்டத்தை எதிர்நோக்கி உலக சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj