ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்துடன் திரையரங்குகளில் ராமாயணம் படம் கொண்டாட்டம்: தில் ராஜு வெளியீடு

ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்துடன் திரையரங்குகளில் ராமாயணம் படம் கொண்டாட்டம்: தில் ராஜு வெளியீடு

திரையரங்குகளில் வெளியாகியுள்ள ராமாயணம் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் மிக பிரம்மாண்டமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளில் படம் தொடங்கியதும் பார்வையாளர்கள் பக்திப் பரவசத்துடன் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டு வரவேற்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. படத்தின் விசுவல் காட்சிகள், உணர்ச்சிகரமான நடிப்பு மற்றும் கம்பீரமான பின்னணி இசை ஆகியவை பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன. திரையரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இரு தெலுங்கு மாநிலங்களிலும் அனைத்து முக்கிய நகரங்களிலும் தியேட்டர்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருவதால் ராமாயணம் திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளை எட்டும் என விநியோகஸ்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்