நவம்பர் 5ல் வெளியாகும் பிரம்மாண்ட 'ராமாயணம்': திரையரங்குகளில் காண இன்னும் 11 நாட்களே உள்ளன!
இந்திய சினிமாவின் உச்சக்கட்ட தயாரிப்பாக நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ராமாயணம்' திரைப்படம் வரும் நவம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படம் திரைக்கு வர இன்னும் 11 நாட்களே உள்ளதாக படக்குழு புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வ கவுண்ட்டவுனைத் தொடங்கியுள்ளது. இப்படத்தில் ஸ்ரீராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் மற்றும் அனுமாராக சன்னி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்திய இதிகாசத்தை மிக நேர்த்தியான விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பங்களுடன் ஐமேக்ஸ் வடிவில் ரசிகர்களுக்கு வழங்க படக்குழு தீவிரமாக உழைத்துள்ளது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகும் இப்படத்தைக் காண சினிமா பிரியர்கள் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj