ஆந்திராவில் தொடங்கியது ராமாயணம் பட டிக்கெட் முன்பதிவு: நவம்பர் 5 திரையரங்குகளில் பிரம்மாண்ட ரிலீஸ்!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணம் திரைப்படத்தின் முன்பதிவு ஆந்திரா முழுவதும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் மற்றும் விநியோகஸ்தர் வம்சி சேகர் தங்களது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளனர். இப்படத்தில் பகவான் ராமராக ரன்பீர் கபூர் நடிக்க, அன்னை சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். இந்திய இதிகாசத்தை மிக பிரம்மாண்டமான முறையில் திரையில் கொண்டு வந்துள்ளதால் இதன் மீதான ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் எஸ்.வி.சி ரிலீஸ் நிறுவனம் மூலம் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராமாயணம் திரைப்படம் வரும் நவம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மற்றும் நவீன தொழில்நுட்ப வடிவங்களில் திரைக்கு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் இந்த இதிகாசப் படைப்பைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Ursvamsishekar