நவம்பர் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகும் ராமாயணா: முன்பதிவு தொடங்கியது
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகியுள்ள 'ராமாயணா' திரைப்படம் நவம்பர் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிடுகிறது. இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் மற்றும் அனுமாராக சன்னி தியோல் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பிரம்மாண்ட விசுவல் காட்சிகள் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்க அனுபவத்துடன் ரசிகர்களைக் கவர காத்திருக்கும் 'ராமாயணா', தீபாவளி பண்டிகைக்குப் பிந்தைய நாட்களில் குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்கும் என கோலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.
· Actor Kayal Devaraj