ரன்பீர் கபூரின் ராமாயணா: நவம்பர் 5 அன்று பிரம்மாண்ட ரிலீஸ்
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இதிகாச காவியமான ராமாயணா திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இன்னும் எட்டு நாட்களே உள்ளதாக படக்குழு எக்ஸ் தளத்தில் புதிய புரோமோ வீடியோவுடன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் நமித் மல்ஹோத்ரா தயாரித்துள்ள இப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், சன்னி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிநவீன விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்துடன் ஐமேக்ஸ் திரைகளிலும் இப்படம் வெளியாகிறது. நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் பான் இந்தியா முறையில் பல மொழிகளில் ராமாயணா திரைக்கு வருகிறது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.
· Actor Kayal Devaraj