அமெரிக்காவில் 'ராமாயணா' டிக்கெட் வேட்டை: ப்ரீமியர் முன்பதிவில் 1.5 மில்லியன் டாலர் வசூல் சாதனை!

அமெரிக்காவில் 'ராமாயணா' டிக்கெட் வேட்டை: ப்ரீமியர் முன்பதிவில் 1.5 மில்லியன் டாலர் வசூல் சாதனை!

பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் இப்போது 'ராமாயணா' படத்தின் வசூல் வேட்டைதான் ஹாட் டாபிக். இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான 'ராமாயணா', வட அமெரிக்கா தியேட்டர்களுக்கான ப்ரீமியர் முன்பதிவிலேயே 1.5 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது என எக்ஸ் தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் என இந்திய திரையுலகின் நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ள இப்படத்திற்கு அமெரிக்க சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் ப்ரீமியர் காட்சிகளுக்காக இதுவரை 60,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும், முன்பதிவு வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளிலேயே இமாலய ஓபனிங்கை இப்படம் பதிவு செய்யும் என்று வர்த்தக நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

· Ursvamsishekar

பழைய செய்திகள்