அமெரிக்காவில் பட்டையைக் கிளப்பும் ராமாயணம்: பிரீமியர் முன்பதிவில் 1.5 மில்லியன் டாலர் வசூல் சாதனை!

அமெரிக்காவில் பட்டையைக் கிளப்பும் ராமாயணம்: பிரீமியர் முன்பதிவில் 1.5 மில்லியன் டாலர் வசூல் சாதனை!

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இதிகாச திரைப்படமான 'ராமாயணம்' வட அமெரிக்கா முழுவதும் வசூல் ரீதியாக பிரம்மாண்ட அலையை ஏற்படுத்தி வருகிறது. வரும் நவம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அங்குள்ள திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு படுவேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, வட அமெரிக்காவில் இப்படத்தின் பிரீமியர் முன்பதிவு விற்பனை மட்டுமே 1.5 மில்லியன் டாலர்களுக்கும் மேல் வசூலித்து அசத்தியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் பிரீமியர் காட்சிகளுக்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துள்ளன. இந்திய சினிமா வரலாற்றில் ஒரு பிரீமியர் காட்சிக்கு இவ்வளவு குறுகிய காலத்தில் இத்தனை டிக்கெட்டுகள் விற்றிருப்பது வர்த்தக வட்டாரங்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அனைத்து மொழி ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ராமாயணம் திரைப்படம் சர்வதேச அளவில் பிரம்மாண்ட தொடக்கத்தைப் பெறும் என கணிக்கப்படுகிறது. நவம்பர் 5 அன்று இந்த பிரம்மாண்ட திரைக் கொண்டாட்டத்தைக் காண உலகெங்கும் உள்ள திரைப்பட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்