'ராமாயணா' படத்தின் ராவண தாண்டவம் வீடியோ வெளியீடு: சிவபக்தனாக மிரட்டும் யஷ்!

'ராமாயணா' படத்தின் ராவண தாண்டவம் வீடியோ வெளியீடு: சிவபக்தனாக மிரட்டும் யஷ்!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் 'ராமாயணா' திரைப்படத்தின் 'ராவண தாண்டவம்' வீடியோ தற்போது யூடியூபில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இந்த வீடியோ லிங்க்கைப் பகிர்ந்து, சிவபெருமான் மீதான ராவணனின் தீவிர பக்தியை வெளிப்படுத்தும் வகையில் இக்காட்சி அமைந்துள்ளதாகப் பதிவிட்டுள்ளார். இப்படத்தில் ராவணனாக நடிக்கும் கே.ஜி.எஃப் புகழ் யஷ், தனது அசுரத்தனமான உடல்மொழியாலும் தீவிர பக்தியாலும் ரசிகர்களைக் கட்டிப்போடுகிறார். நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமனாகவும், சாய் பல்லவி சீதையாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர். உலகப் புகழ் பெற்ற ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் இணைந்து இசை அமைப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் 'ராமாயணா' திரைப்படம், வரும் 2026 நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் ஐமேக்ஸ் உள்ளிட்ட அனைத்து பிரீமியம் திரைகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. ராவணனின் இந்த ஆக்ரோஷமான தாண்டவ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்களால் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்