ஆந்திரா, தெலங்கானாவில் களைகட்டும் 'ராமாயணா': இரவு காட்சிகளில் நிரம்பி வழியும் ரசிகர்கள்!
வெள்ளித்திரையில் கண்கவர் காவிய அனுபவமாக வெளியாகி சினிமா ரசிகர்களை பரவசப்படுத்தி வரும் 'ராமாயணா' திரைப்படத்திற்கு தெலுங்கு மாநிலங்களில் மாபெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. ஆந்திரா மற்றும் தெலங்கானா முழுவதும் மாலை மற்றும் இரவு நேரக் காட்சிகள் தொடர்ந்து முழுமையாக நிரம்பி ஹவுஸ்புல் காட்சிகளாக மாறி வருவதாக விநியோகஸ்தர் வம்சி சேகர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பிரம்மாண்டமாக விநியோகம் செய்துள்ளார். மிக உயர்தரமான மேக்கிங், காட்சிகளின் நேர்த்தி மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் சிறப்பான பங்களிப்பு காரணமாக குடும்ப ரசிகர்கள் தொடர்ச்சியாக திரையரங்குகளுக்கு வருகை தந்து படத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வார நாட்களிலேயே இந்த அளவுக்கு குடும்ப பார்வையாளர்கள் கூட்டம் அலைமோதுவது விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மிகப்பெரிய வணிக ரீதியான நம்பிக்கையையும் அளித்துள்ளது.
· Ursvamsishekar