தமிழகமெங்கும் 'ராமாயணா' தமிழ்ப் பதிப்பு வெளியீடு: திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்ட ரிலீஸ்!

தமிழகமெங்கும் 'ராமாயணா' தமிழ்ப் பதிப்பு வெளியீடு: திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரம்மாண்ட ரிலீஸ்!

நம் அனைவருக்கும் சொந்தமான இதிகாசக் கதையான 'ராமாயணா' திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பு, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாகத் திரையிடப்பட்டுள்ளது குறித்து நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான திங்க் ஸ்டுடியோஸ் (Think Studios) நிறுவனம் இப்படத்தைத் தமிழக திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது. தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களுடன் மிக நேர்த்தியாக டப் செய்யப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் தொடக்கத்திலிருந்தே உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது. அதிநவீன விஎஃப்எக்ஸ் நுட்பங்கள் மற்றும் கண்கவர் தயாரிப்பு தரம் காரணமாக திரையரங்குகளில் பார்வையாளர்கள் குடும்பத்துடன் ரசித்து வருகின்றனர். சென்னையின் முக்கிய திரையரங்குகள் உட்பட தமிழகத்தின் முன்னணி நகரங்களில் கூடுதல் காட்சிகளுடன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விடுமுறை தினத்தை முன்னிட்டு குடும்பங்கள் திரையரங்குகளை நோக்கிப் படையெடுத்து வருவதால், ஆன்லைன் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ரசிகர்களின் தியேட்டர் அனுபவத்திற்கு இத்திரைப்படம் சிறந்த தேர்வாக அமைந்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்