இன்னும் 5 நாட்களே மீதம்: திரையரங்குகளில் ராமாயணம் திரைப்படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பு!
இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படமான 'ராமாயணம்' உலகம் முழுவதும் திரைக்கு வர இன்னும் ஐந்து நாட்களே உள்ளன என படக்குழு அதிகாரப்பூர்வமாக நினைவூட்டியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது முக்கிய நகரங்களில் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது. பல முக்கிய திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத் தீர்ந்து புதிய சாதனை படைத்து வருகின்றன. திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் அதிகாலை காட்சிகளுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் மற்றும் உணர்ச்சிபூர்வமான இதிகாசக் கதைக்களத்தை ஐமேக்ஸ் உள்ளிட்ட பெரிய திரைகளில் கண்டுகளிக்க ரசிகர்கள் பேரார்வம் காட்டி வருகின்றனர். வரும் நவம்பர் 5 ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
· Ursvamsishekar