திரையரங்குகளில் வெளியாகும் ராமாயணம்: தமிழகத்தில் முன்பதிவு விறுவிறுப்பு!

திரையரங்குகளில் வெளியாகும் ராமாயணம்: தமிழகத்தில் முன்பதிவு விறுவிறுப்பு!

பிரமாண்டமான இதிகாசக் கதையான 'ராமாயணம்' திரைப்படம் நாளை (நவம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த திரைப்படத்தை திங்க் ஸ்டுடியோஸ் (Think Studios) நிறுவனம் மிக பிரமாண்டமாக வெளியிடுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் பெரிய திரையில் ராமாயணத்தின் காட்சிகளை அனுபவிக்க ரசிகர்கள் பலரும் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். விடுமுறை காலத்தை முன்னிட்டு குடும்ப ரசிகர்களின் பெரும் வரவேற்பை இப்படம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்