வெளியானது ராமாயணா படத்தின் மூன்றாவது பாடல் மங்கள வண்ணமே

வெளியானது ராமாயணா படத்தின் மூன்றாவது பாடல் மங்கள வண்ணமே

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா திரைப்படத்தின் மூன்றாவது பாடலான மங்கள வண்ணமே இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த காவியப் படைப்பில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், சன்னி தியோல் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோரின் கூட்டு இசையில் வெளிவந்துள்ள இந்த பக்தி மணம் கமழும் மெல்லிசைப் பாடல் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளதுடன் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. பாடலின் காட்சி அமைப்பும் மெல்லிசையும் ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. வரும் நவம்பர் 5 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமான முறையில் இப்படம் வெளியாகவுள்ளது. பாடல் வெளியானதைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைத்து மொழி சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. ரசிகர்கள் இப்பாடலை சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

· Only Kollywood

பழைய செய்திகள்