ராமர் மற்றும் ஜானகியின் பாசத்தை விவரிக்கும் ‘ராமாயணா’: ரங்குலு ரங்குலே தெலுங்கு பாடல் வெளியானது!
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படத்தின் மூன்றாவது தெலுங்கு பாடல் ‘ரங்குலு ரங்குலே’ தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ராமபிரானுக்கும் அன்னை ஜானகிக்கும் இடையிலான ஆழமான பாசப் பிணைப்பை அழகாக விவரிக்கும் வகையில் இந்த மெல்லிசைப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் படக்குழு பகிர்ந்துள்ளது. இப்படத்தின் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களின் வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜுவின் எஸ்.வி.சி ரிலீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் ராமர், சீதையாக நடித்துள்ள காட்சிகள் ரசிகர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோரின் கூட்டு இசையில் உருவாகியுள்ள பாடல்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இக்காப்பியம் வரும் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் பான் இந்தியா திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் தற்போது வெளியாகியுள்ள ‘ரங்குலு ரங்குலே’ பாடல் யூடியூபில் டிரெண்டாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
· Ursvamsishekar