உலகம் முழுவதும் 'ராமாயணம்' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு துவக்கம்: நவம்பர் 5 அன்று ரிலீஸ்!
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இதிகாசத் திரைப்படமாக உருவாகியுள்ள 'ராமாயணம்' வரும் நவம்பர் 5 அன்று உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், உலகம் முழுவதும் டிக்கெட் முன்பதிவு அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளதாக காயல் தேவராஜ் தெரிவித்துள்ளார். நித்தேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும், ராவணனாக யாஷும் நடித்துள்ளனர். மேலும் ஆஸ்கர் நாயகர்கள் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளதால், சர்வதேச தரத்தில் ஐமேக்ஸ் உள்ளிட்ட அனைத்து பிரீமியம் திரைகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதிகாசக் காவியத்தை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj