விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரணபலி' படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை ரிலீஸ்!

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரணபலி' படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை ரிலீஸ்!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ரணபலி' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5:04 மணிக்கு வெளியாகிறது. அஜய் - அதுல் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாடல் தமிழில் 'தீரம்தீரம்' என்ற பெயரில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ராகுல் சாங்க்ரித்யன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் பான்-இந்தியா அளவில் உருவாகி வருகிறது. தெலுங்கு மற்றும் கன்னடத்தில் 'கோபாலி', இந்தியில் 'கர்ஜனா', மலையாளத்தில் 'போரின் காஹளம்' என பல மொழிகளில் இப்பாடல் வெளியாகவுள்ளது. ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூ முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தின் பிரம்மாண்ட காட்சிகள் மற்றும் வரலாற்றுப் பின்னணி சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன. தெய்வீக ஆற்றலும் மாஸான இசையும் கலந்த ஒரு பாடலாக இது அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. உலகமெங்கும் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள 'ரணபலி' திரைப்படத்தின் இந்த இரண்டாவது பாடலைக் கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்