2 கோடி பார்வைகளைக் கடந்து ட்ரெண்டாகும் 'ரணபலி' பாடல்: அக்டோபர் 16 ரிலீஸ்!
பான்-இந்தியா திரைப்படமாக பிரம்மாண்டமான முறையில் உருவாகியுள்ள 'ரணபலி' திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'தீரம் தீரம்', அனைத்து மொழிகளிலும் சேர்த்து 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் வரலாறு படைத்து வருகிறது. தெலுங்கில் கொபலி, தமிழில் தீரம் தீரம், இந்தியில் கர்ஜனா என பல்வேறு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இப்பாடல் சமூக வலைத்தளங்களிலும் யூடியூப் தளத்திலும் ரசிகர்களின் விருப்பமான டிரெண்டிங் பாடலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அனல் பறக்கும் வேகமான தாள அமைப்பும், திரையில் தோன்றும் மாஸ் காட்சிகளும் ரசிகர்களிடையே உற்சாக அலையை ஏற்படுத்தியுள்ளன. இசை ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ள இந்த பாடல் பாக்ஸ் ஆபிஸ் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 16, 2026 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பாடல்கள் பெற்று வரும் இந்த மாபெரும் வெற்றி படத்தின் மீதான ஆரம்பக்கட்ட எதிர்பார்ப்பை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. படக்குழுவினர் அடுத்தடுத்து பல சுவாரசியமான விளம்பர நிகழ்வுகளைத் திட்டமிட்டுள்ளனர்.
· Actor Kayal Devaraj