3.5 கோடி பார்வைகளைக் கடந்து டிரெண்டாகும் 'ரணபலி' டிரெய்லர்: அக்டோபர் 16 அன்று உலகமெங்கும் ரிலீஸ்!

3.5 கோடி பார்வைகளைக் கடந்து டிரெண்டாகும் 'ரணபலி' டிரெய்லர்: அக்டோபர் 16 அன்று உலகமெங்கும் ரிலீஸ்!

ஆக்‌ஷன் மற்றும் அதிரடிக் காட்சிகள் நிறைந்த 'ரணபலி' திரைப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் 35 மில்லியனுக்கும் அதிகமான (3.5 கோடி) டிஜிட்டல் பார்வைகளைக் கடந்து பட்டையைக் கிளப்பி வருகிறது. இந்த அதிரடி சாதனையை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் இத்திரைப்படத்தின் டிரெய்லர் தொடர்ந்து முதலிடத்தில் டிரெண்டாகி வருகிறது. மிரட்டலான சண்டைக்காட்சிகள் மற்றும் அனல் பறக்கும் வசனங்களுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர், ஆக்‌ஷன் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. கதைக்களத்தின் விறுவிறுப்பும், தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் ஒவ்வொரு காட்சியிலும் சிறப்பாக வெளிப்பட்டிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'ரணபலி' திரைப்படம் வரும் அக்டோபர் 16 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. படத்தின் முன்னோட்டத்திற்குக் கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, திரையரங்கு முன்பதிவும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்