ராமர் வேடத்தில் நடித்தது வாழ்நாளில் கிடைத்த பாக்கியம்: ராமாயணம் படம் குறித்து மனம் திறந்த ரன்பீர் கபூர்!

ராமர் வேடத்தில் நடித்தது வாழ்நாளில் கிடைத்த பாக்கியம்: ராமாயணம் படம் குறித்து மனம் திறந்த ரன்பீர் கபூர்!

ராமாயணம் திரைப்படத்தில் பகவான் ஸ்ரீராமர் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து பாலிவுட் முன்னணி நடிகர் ரன்பீர் கபூர் சிறப்பு நேர்காணலில் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். சில கதாபாத்திரங்கள் ஒரு நடிகரின் வாழ்வில் ஒருமுறை மட்டுமே அமையும் என்றும், சில கதைகள் வாழ்நாள் முழுவதும் உடனிருக்கும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ஸ்ரீராமரின் அமைதி, அளப்பரிய தியாகம் மற்றும் அறநெறிகளைத் திரையில் பிரதிபலிப்பது தனக்குக் கிடைத்த அரிய பாக்கியம் என அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் நித்தீஷ் திவாரி உருவாக்கியுள்ள இத்திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தின் தூய்மையை வெளிப்படுத்த பல மாதங்கள் ஆன்மீக ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். வரும் நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள ராமாயணம் படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இப்படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்