ஸ்ரீராமர் வேடத்தில் நடித்தது என் வாழ்நாள் பாக்கியம்: ராமாயணா குறித்து உருகிய ரன்பீர் கபூர்!
சில கதாபாத்திரங்கள் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நடிக்கக் கிடைக்கும், சில கதைகள் வாழ்நாள் முழுவதும் நம்முடன் பயணிக்கும் என்று நடிகர் ரன்பீர் கபூர் தனது ராமாயணா திரைப்பட அனுபவம் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். இந்த சிறப்பு நேர்காணல் வீடியோ பதிவை சினிமா மக்கள் தொடர்பாளர் வம்சி சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ராமாயணா திரைப்படத்தில் பகவான் ஸ்ரீராமர் வேடத்தை ஏற்றது குறித்துப் பேசிய ரன்பீர் கபூர், இந்த புனிதமான கதாபாத்திரத்தில் நடித்ததை ஒரு மிகப்பெரிய பாக்கியமாகக் கருதுவதாகவும், ராமாயணத்தின் காலத்தால் அழியாத தத்துவங்கள் தனது வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் விநியோகிக்கும் இத்திரைப்படம் வரும் நவம்பர் 5-ஆம் தேதி பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது தெலுங்கு மாநிலங்களிலும் இத்திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு முழு வீச்சில் தொடங்கியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
· Ursvamsishekar