பாக்ஸ் ஆபீஸில் 'ராமாயணா' புயல்: புக்கிங் தளங்களில் மட்டுமே 1.4 கோடி டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன!
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ராமாயணா' திரைப்படம் டிக்கெட் முன்பதிவு தளங்களில் வரலாறு காணாத சாதனையைப் படைத்து வருகிறது. புக்மைஷோ தளத்தில் 80 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளும், டிஸ்ட்ரிக்ட் ஆப்பில் 60 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்த பிரம்மாண்டக் காவியத் திரைப்படம் வெளியானது முதல் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில், வார இறுதி நாட்களைப் போலவே வார நாட்களிலும் அனைத்து முக்கிய நகரங்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. பார்வையாளர்களின் பேராதரவோடு பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் ராமாயணம், நடப்பு ஆண்டின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகத் தன் முத்திரையைப் பதித்துள்ளது. இன்னும் பல வாரங்களுக்கு திரையரங்குகளில் இதன் வசூல் ஆதிக்கம் தொடரும் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
· Actor Kayal Devaraj