ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் இணையும் 'ராமாயணம்': தமிழக திரையரங்கு உரிமத்தைக் கைப்பற்றிய திங்க் ஸ்டுடியோஸ்!
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை முன்னணி நிறுவனமான திங்க் ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது. நிதிஷ் திவாரி இயக்கத்தில் உருவாகும் இந்த மெகா படைப்பு, வரும் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மிகப்பெரிய அளவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஸ்ரீராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக கேஜிஎஃப் புகழ் யாஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அனுமன் வேடத்தில் சன்னி தியோலும், லட்சுமணனாக ரவி துபேயும் நடித்துள்ளனர். புகழ்பெற்ற ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கின்றனர் என்பது இந்திய சினிமா ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாகும் இப்படம் ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியாகவுள்ளது. தமிழகத்தில் திங்க் ஸ்டுடியோஸ் மூலம் அதிக திரைகளில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு வரும் நிலையில், விரைவில் முன்னோட்டம் மற்றும் பாடல் வெளியீடுகள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வரவுள்ளன.
· Idiamondbabu