ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் கூட்டணியின் ராமாயணம்: நவம்பர் 5-ல் பிரம்மாண்ட உலக ரிலீஸ்!
ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் ஆகிய நட்சத்திர கூட்டணி திரையில் தோன்றவுள்ள பிரம்மாண்ட 'ராமாயணம்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல சினிமா பிஆர்ஓ வம்சி சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த அதிரடி அறிவிப்பைப் பகிர்ந்துள்ளார். இராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, இராவணனாக யாஷ் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ள இந்த இதிகாசப் படைப்பு மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது. இந்த மூவரின் அபாரமான நடிப்பும் கம்பீரமான தோற்றமும் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஐமேக்ஸ், 3டி, 4டிஎக்ஸ் மற்றும் டால்பி சினிமா உள்ளிட்ட அனைத்து உயர் தொழில்நுட்ப வடிவங்களிலும் இப்படம் திரைக்கு வருகிறது. வரும் நவம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பான் இந்திய திரைப்படமாக பிரம்மாண்ட வெளியீட்டிற்கு தயாராகிறது 'ராமாயணம்'. உலகெங்கும் உள்ள திரைப்பட ரசிகர்கள் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு செய்து இந்த இதிகாச அனுபவத்தை கொண்டாடக் காத்திருக்கின்றனர்.
· Ursvamsishekar