ரன்பீர் கபூர், யஷ் இணையும் ‘ராமாயணம்’: பிஆர்ஓ வம்சி சேகர் பகிர்ந்த உற்சாகப் பதிவு!

ரன்பீர் கபூர், யஷ் இணையும் ‘ராமாயணம்’: பிஆர்ஓ வம்சி சேகர் பகிர்ந்த உற்சாகப் பதிவு!

இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ படத்தில், பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் யஷ் இணைந்து நடிப்பது இந்திய சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரபல திரைப்பட மக்கள் தொடர்பாளர் (பிஆர்ஓ) வம்சி சேகர், ‘ராமாயணம்’ படத்தின் அதிகாரப்பூர்வ பிஆர் பணிகளில் இணைந்திருப்பதாக தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஏற்கனவே ரன்பீர் கபூர் நடித்த ‘அனிமல்’ படத்திலும், யஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்திலும் பிஆர்ஓவாக பணியாற்றிய அனுபவத்தைக் குறிப்பிட்டுள்ள வம்சி சேகர், இந்த இரு மாபெரும் நட்சத்திரங்களும் ‘ராமாயணம்’ என்ற இதிகாசக் களத்தில் ஒன்றாக இணைவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், யஷ் ராவணனாகவும் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில், இருவரின் திரைப் பகிர்வும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டணியில் பல பாகங்களாகத் தயாராகும் ‘ராமாயணம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சாய் பல்லவி சீதையாக நடிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் புதிய அப்டேட்டுகள் விரைவில் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்