எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராஷ்மிகா மந்தனா: அனிருத் இசை அமைப்பில் பிரம்மாண்ட அறிவிப்பு!

எம்.எஸ். சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ராஷ்மிகா மந்தனா: அனிருத் இசை அமைப்பில் பிரம்மாண்ட அறிவிப்பு!

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் 110வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'எம்.எஸ். - எ லெகசி ஆன் ஸ்கிரீன்' (M.S. - A Legacy on Screen) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா புகழ்பெற்ற இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாத்திரத்தில் நடிக்கிறார். சென்னையில் கர்நாடக இசையின் வரலாற்று அடையாளமான மியூசிக் அகாடமியில் வைத்து இந்த வரலாற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. கௌதம் தின்ன நூரி இயக்கும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பன்னி வாசு ஆகியோர் இணைந்து பான் இந்தியா அளவில் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். இந்திய பாரம்பரிய இசையின் பெருமையை உலகளவில் எடுத்துச் சென்ற ஒரு ஒப்பற்ற சாதனைப் பெண்ணின் வாழ்க்கைக் கதையாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதால், ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

· Nikil Murukan

பழைய செய்திகள்