ராஷ்மிகா மந்தனாவின் 'மைசா': திரையரங்குகளில் வெளியாக இன்னும் 10 நாட்களே பாக்கி!
நடிகை ராஷ்மிகா மந்தனா முதன்மைக் கதாபாத்திரத்தில் அதிரடி ஆக்ஷன் அவதாரத்தில் நடித்துள்ள 'மைசா' திரைப்படம் திரைக்கு வர இன்னும் 10 நாட்களே உள்ளன. சினிமா மக்கள் தொடர்பாளர் சதீஷ் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் இந்த கவுண்டவுன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா பிலிம்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம் முழுமையான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. இதுவரை கண்டிராத வகையில் ராஷ்மிகாவின் ஆக்ரோஷமான நடிப்பு மற்றும் அதிரடி சண்டைக் காட்சிகள் ரசிகர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியூட்டும் திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. உலகம் முழுவதும் நவம்பர் 27 அன்று பல மொழிகளில் வெளியாகும் 'மைசா' திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. திரையரங்க முன்பதிவுகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ராஷ்மிகாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
· Prosathish